இலங்கை
மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறிச் செயற்படும் ஆசிரியர்!
மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறிச் செயற்படும் ஆசிரியர்!
ஆசிரியர் ஒருவர் தனது தற்காலிக இணைப்பு காலம் முடிவடைந்தும் மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறி செயற்படுவதாக ஆசரியர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
வவுனியா – நெளுக்குளம் கலைமகள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது தற்காலிக இணைப்பு காலம் முடிவடைந்தும் குறித்த பாடசாலையிலேயே கடமைபுரிந்து வருகின்றார்.
இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன்பின்னர் குறித்த ஆசிரியருக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளரின் அறிவுறுத்தலை மீறி தற்காலிக இணைப்பு பாடசாலையிலேயே அவர் கடமை புரிந்து வருகின்றமை தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வருகின்றமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த ஆசிரியரின் இணைப்பு நிறைவடைந்துள்ளது. எனினும் அந்த ஆசிரியர் நிரந்தர வலயம் திரும்பாமல் தற்காலிக பாடசாலையில் கடமையாற்றி வருகின்றார்.
குறித்த ஆசிரியருக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்க வவுனியா மாவட்ட தலைவர், வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் கடிதத்தின் பிரதி ஆளுநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.