இலங்கை
மாணவிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை
மாணவிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை
இந்தியாவின் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் 16 வயது மாணவிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மாணவியை 2 இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து தனது வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் மாணவியை வன்கொடுமை செய்த குறித்த இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.