இலங்கை

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Published

on

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சுந்தரக்குருக்கள் ஞானசர்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

 குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த நபர் நேற்று பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார். 

Advertisement

ரயில் வரும்போது ரயில் கடவை மூடப்பட்டிருந்தபோதும் அதனை கடப்பதற்கு முயற்சித்தவேளை ரயில் அவரது துவிச்சக்கர வண்டியின் பின் பக்கத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

 விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

 அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

Advertisement

 உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version