உலகம்

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் – 4 பேர் பலி

Published

on

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் – 4 பேர் பலி

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. 

இந்நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024ம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.

Advertisement

இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒரு மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 500க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது.

தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement

இந்நிலையில், தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கோபால்கஞ்ச் நகரில் பேரணி நடந்தது. 

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் அதிகம் இருக்க கூடிய இந்த பகுதியில் பலத்த பாதுகாப்புடன் பேரணி தொடங்கியது.

அப்போது, அவாமி லீக் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். பல்வேறு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. 

Advertisement

கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் பரவியதும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர் தலைவர்கள் காவல் நிலையங்களுக்குள் தஞ்சம் அடைந்தனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version