சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் ‘தலைவன் தலைவி’..!டிரெய்லர் வெளியீடு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு!

Published

on

விஜய் சேதுபதி நடிக்கும் ‘தலைவன் தலைவி’..!டிரெய்லர் வெளியீடு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு!

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தலைவன் தலைவி’. இது விஜய் சேதுபதியின் 52-வது படம் என்பதால் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த குடும்பக் கதையின் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு புரோட்டா மாஸ்டராக வேடமணிந்துள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து வெளியாகிய ‘பொட்டல முட்டாயே’ பாடலும் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், விவேக் வரிகளில் ‘ஆகாச வீரன்’ பாடலை பிரதீப் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர். அந்த பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கணவன் – மனைவி உறவின் காதல், சண்டை, பிரிவு, விவாகரத்து, மீண்டும் உருவாகும் புரிதல் என வாழ்க்கையின் பல பரிமாணங்களை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளதுடன், பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version