சினிமா

“2015-ல் வெளியே நிறுத்தப்பட்டேன் 2025-ல் பாதுகாப்புடன் மேடையில்..!பாலாவின் பேச்சு…!

Published

on

“2015-ல் வெளியே நிறுத்தப்பட்டேன் 2025-ல் பாதுகாப்புடன் மேடையில்..!பாலாவின் பேச்சு…!

தமிழ் நடன உலகின் மறுவிளக்காக விளங்கும் “நடனக் கலையரசி கலா” அவர்கள் 40 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விழா கடந்த வாரம் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா,  ஓர் திருவிழா மட்டுமல்ல ஒரு தலைமுறையின் உழைப்பையும், தியாகத்தையும், வெற்றியும் கொண்டாடும் தருணமாக இருந்தது.இவ்விழாவில் கலந்து கொண்ட பாலா, தனது உணர்வுகளால் அனைவரையும் நெகிழவைத்தார். “2015-ல் நான் இந்த இடத்துக்குள்ளே கூட வர முடியாமல் நிறுத்தப்பட்டேன். இன்று, அதே இடத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துவரப்படுகிறேன் என்பது ஒரு பெருமை,” என்றார் . பாலா, தனது வாழ்க்கையின் முதல் படிகளில் கஷ்டப்பட்ட தருணங்களை பகிர்ந்தார். “  ரம்பா மேடம் மற்றும் அவருடைய கணவர் எனக்கு முதல் முறையாக நம்பிக்கை வைத்து, 3 லட்சம் கொடுத்து ‘நீ உனக்காக செலவு பண்ணு’ என்று சொன்னார்கள். அந்த நாள் என் வாழ்க்கையை மாற்றிய நாள்,” என்றார் அவர்.இந்த விழா வெறும் நடனம், இசை, கலைஞர்களின் பங்கேற்பு மட்டுமல்ல. இது நம் சமூகத்தின் மனக்கோட்டையை காட்டும் ஒரு மேடையாக இருந்தது. கலா அம்மாவும், அவருடைய குடும்பமும், பல தாழ்த்தப்பட்ட பின்னணியில் இருந்தவர்களுக்கு வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளனர். “கண்ணுக்கு தெரியாமல், நிறைய பேருக்கு ஷோரூம் போட்டுருக்காங்க,” என்கிறார் பாலா.இந்த நிகழ்ச்சி, ஒரு கலையின் பயணத்தை மட்டுமல்ல ஒரு மனிதனின் வாழ்க்கை மாற்றத்தை கொண்டாடும் அரிய தருணமாக அமைந்தது. கலா அம்மாவின் பங்களிப்பு ஒரு கலையின் போக்கை மாற்றியது  அவரது ஒளி இன்னும் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும்.  என  பலர் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version