இலங்கை
ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி; அறிவித்தார் ஆளுநர்!
ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி; அறிவித்தார் ஆளுநர்!
வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள சில தொழில்துறைக்கான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
எனவே விரைவில் தொழினுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சில ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படும் என வடக்கு மாகாண ஆளுநரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை விரைந்து வினைத்திறனாக செலவு செய்து முடிக்க வேண்டும். எமக்கு ஒதுக்கப்பட்ட நிதி நூறு வீதமும் இந்த ஆண்டு இறுதிக்குள் செலவு செய்து முடிக்கப்படும். அதேநேரம் இதன் விளைவுகளையும் நாம் மதிப்பீடு செய்யவேண்டும் மக்களுக்கு இதனால் எவ்வாறான பயன்கள் ஏற்பட்டன என்பது தொடர்பிலும் ஆராயவேண்டும்.
அதேநேரம் அடுத்த ஆண்டுக்கான திட்டங்களையும் இப்போதே தெரிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் இறுதிப்படுத்த வேண்டும். அபிவிருத்திப் பணிகள் சமச்சீராகக் கிடைக்கப்பெறுவதை பிரதேச செயலர்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.