இலங்கை
“இதுதான் கடைசி”!
“இதுதான் கடைசி”!
“ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைக் குழப்பி தனிநபர்கள் ‘படம் காட்டுகின்ற’ கடைசிக் கூட்டம் இதுவாகவே இருக்கும்” என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் காட்டமாகத் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத்தெரிவித்தார்.யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்திச்செயற்பாடுகள் பற்றி குறைந்தளவான நேரமே பேசப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளை திட்டமிட்டு அவமரியாதை செய்தால் அது நேரடியாக அபிவிருத்திப் பணிகளையே பாதிக்கும். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் தனிநபர்கள் படம் காட்டுகின்ற கடைசிக் கூட்டம் இதுவாகவே இருக்கும். குழப்பத்தில் ஈடுபடுபவர்கள் கூட்டங்களுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறான குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமிருக்காது’ – என்றார்