இலங்கை

இரவிலும் ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வாய்ப்பு! – ரயில்வே திணைக்களம் தகவல்

Published

on

இரவிலும் ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வாய்ப்பு! – ரயில்வே திணைக்களம் தகவல்

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, 

Advertisement

சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவிக்கையில், 

இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும். 

Advertisement

இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். 

உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நானுஓயா ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் திட்டம் குறித்தும் தம்மிக ஜயசுந்தர கருத்து தெரிவித்தார்.

Advertisement

சுற்றுலாப் பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காக இந்த ஹோட்டல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஓகஸ்ட் தொடக்கத்தில் இதை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version