இலங்கை

இலங்கையின் கல்விமுறையில் மாற்றம்!

Published

on

இலங்கையின் கல்விமுறையில் மாற்றம்!

இலங்கையின் கல்விமுறையில்  10 மற்றும் 11 ஆம் தரங்களில் தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் மதம் ஆகிய பாடங்கள் கட்டாய பாடங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்தது. 

Advertisement

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்த நிலையிலேயே பாடத்திட்டங்கள் தொடர்பான மாற்றங்கள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி 10 மற்றும் 11 ஆம் தரங்களில் தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் மதம் ஆகிய பாடங்கள் கட்டாய பாடங்களாக பட்டியலிடப்பட்டுள்ள, அதே நேரத்தில் தேர்வுப் பாடங்களில் வரலாறு மற்றும் அழகியல் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. 

Advertisement

அத்தகைய சூழலில், புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version