இலங்கை
இலங்கையில் கைதான 21 இந்திய பிரஜைகள் ; பெரும் மோசடி செயல் அம்பலம்
இலங்கையில் கைதான 21 இந்திய பிரஜைகள் ; பெரும் மோசடி செயல் அம்பலம்
இணையவழி மோசடியில் ஈடுபட்ட 21 இந்தியப் பிரஜைகள், இன்று குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின், புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுலா விசாவின் மூலம் நாட்டிற்கு வந்து இந்த குழுவினர், விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கிருலப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் புலனாய்வு பிரிவின் கீழ் உள்ள, இடர் மதிப்பீட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தரவு பகுப்பாய்வின் பின்னர் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினரை உடனடியாக இந்தியாவிற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.