இலங்கை
உலகை உலுக்கிய விமான விபத்து ; டாடா நிறுவனம் செய்த நெகிழ்ச்சி செயல்
உலகை உலுக்கிய விமான விபத்து ; டாடா நிறுவனம் செய்த நெகிழ்ச்சி செயல்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் நகருக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI-171 போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் தொடர்ந்து மேலே பறக்க முடியாமல் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.ஒருவர் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார்.
மேலும், விடுதியில் இருந்தவர்கள், விடுதி அருகில் இருந்தவர்கள் 19 பேர் பலியானர்கள். இதனால் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கான மருதுவ செலவு ஏற்கப்படும்.
மருத்துவக் கல்லூரி விடுதி வளாக கட்டமைப்புகள் சரி செய்து தரப்படும் என டாடா குழுமம் உறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில் டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை 500 கோடி ரூபாய் அறக்கட்டளையை அமைத்துள்ளது.
AI-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை என்ற பெயரில் மும்பையில் பதிவு செய்துள்ளது.