சினிமா

என் உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா பாலா தான் காரணம்!! 3வது மனைவி பகீர் புகார்..

Published

on

என் உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா பாலா தான் காரணம்!! 3வது மனைவி பகீர் புகார்..

வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகர் பாலா. மலையாள சினிமாவில் நடித்து வரும் பாலா, இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார். இதுவரை 4 திருமணம் செய்த பாலா, 3வது மனைவியை விட்டுவிட்டு 4வது முறையாக உறவினர் பெண் கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் பாலா குறித்து அவரின் 3வது மனைவி டாக்டர் எலிசபெத், அடுக்கடுக்கான் புகார்களை முன் வைத்து வந்ததோடு, தன் உயிருக்கு ஏதாவது ஆனால் அதற்கு பாலா தான் காரணம் என்று மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.அந்த வீடியோவில், பாலா மீது புகார் அளித்தும் போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாலா தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாகவும் கூறியிருக்கிறார்.பாலாவால் நான் பல மிரட்டல்களையும் பொய் வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என்னுடன் திருமணமாகவில்லை என்று அவர் கூறுவது எல்லாம் பொய். பின் ஏன் அவர் என்னை தன் மனைவி என்று கூறி பொது மேடைகளுக்கு அழைத்துச்சென்றார் என்று எனக்கு தெரியவிஒல்லை.எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பாலா தான் பொறுப்பு. 250 கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட நபர் பாலா, என்னை திருமணம் செய்யவில்லை, என்க்கும் அவருக்கும் இடையே மருத்துவர் – நோயாளி என்ற உறவு மட்டும் இருந்ததாக பாலா கூறுகிறார். அது பொய், நான் நீதிக்காகப்போராடுவேன் என்று டாக்டர் எலிசபெத் கூறியிருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version