சினிமா
‘ஒன்ஸ் மோர்’ படத்தின் அடுத்த காதல் பாடல் ‘மீண்டுமா?’ நாளை வெளியீடு..!
‘ஒன்ஸ் மோர்’ படத்தின் அடுத்த காதல் பாடல் ‘மீண்டுமா?’ நாளை வெளியீடு..!
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம், ரொமான்டிக் காதல் கதை அம்சங்களை மையமாகக் கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப் படத்தில் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்க, ஒளிப்பதிவை அரவிந்த் விஸ்வநாதன் கவனித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்த திரைப்படம், ஏற்கனவே வெளியான ‘வா கண்ணம்மா’ பாடலின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த பாடலான ‘மீண்டுமா?’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோ மூலம் அறிவித்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாடலும் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மீண்டுமா?’ பாடல் ஹேஷம் அப்துல் வஹாபின் இசையில் உருவாகி, காதலின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் என படக்குழு தெரிவித்துள்ளது.