பொழுதுபோக்கு
ஒரு நிமிஷம் சிரிக்காம இருக்கணும்; லைலாவுக்கு சவால் விட்ட விக்ரம்; கடைசில இப்படி ஆகிடுச்சே!
ஒரு நிமிஷம் சிரிக்காம இருக்கணும்; லைலாவுக்கு சவால் விட்ட விக்ரம்; கடைசில இப்படி ஆகிடுச்சே!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகைகளில் லைலாவும் ஒருவர். குறிப்பாக அவரது க்யூட்டான சிரிப்புக்காகவே பலரும் அவருக்கு ரசிகர்களாக மாறினர். ஆனால், ‘பிதாமகன்’ படப்பிடிப்பின் போது ஒரு நிமிடம் சிரிக்காமல் இருக்க வேண்டும் என தனக்கு, நடிகர் விக்ரம் சவால் விடுத்த சுவாரசிய சம்பவத்தை ட்ரெண்ட்க்ளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் லைலா நினைவு கூர்ந்தார்.நடிகை லைலா, 1980-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி கோவாவில் பிறந்தார். ஏறத்தாழ, 1990-களின் பிற்பகுதியில் தனது கலைப்பயணத்தை லைலா தொடங்கினார். அதன்படி, 1996-ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான ‘துஷ்மன் துனியா கா’ மூலம் லைலா அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக லைலா வலம் வந்தார்.தமிழில், ‘கள்ளழகர்’, ‘முதல்வன்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘த்ரீ ரோசஸ்’, ‘கம்பீரம்’, ‘உள்ளம் கேட்குமே’, ‘பரமசிவன்’ போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக, ‘நந்தா’, ‘உன்னை நினைத்து’, ‘மௌனம் பேசியதே’, ‘பிதாமகன்’ போன்ற படங்களில் தொடர்ச்சியாக சூர்யாவுடன் லைலா நடித்துள்ளார். இதன் பின்னர், சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகிய லைலா, ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டார். மேலும், சில வெப் சிரீஸ்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில், தமிழில் ‘சர்தார்’, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆகிய படங்கள் மூலம் நடிகை லைலா ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த சூழலில், ட்ரெண்ட்க்ளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலின் போது ‘பிதாமகன்’ படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவத்தை லைலா நினைவு கூர்ந்தார். குறிப்பாக, அந்த படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் தனக்கு ஒரு சவால் விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த வகையில், “பிதாமகன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நானும், விக்ரமும் பணியாற்றினோம். அப்போது, விக்ரம் எனக்கு ஒரு சவால் விடுத்தார். அதன்படி, ஒரு நிமிடத்திற்கு சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று விக்ரம் என்னிடம் தெரிவித்தார். இந்த சவாலை நானும் ஏற்றுக் கொண்டேன். அப்போது, படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் என்னை கவனித்துக் கொண்டிருந்தனர்.விக்ரமும் சரியாக விநாடிகளை கணக்கு வைக்கத் தொடங்கினார். நானும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தேன். இதனால், என் கண்களில் இருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. அப்படியும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 20 விநாடிகளில் சிரித்து விட்டேன்” என நடிலை லைலா தெரிவித்துள்ளார்.