இலங்கை

பண்டாரவளை – உடுகும்பல்வெல சரணாலயம் அருகே காட்டுத்தீ!

Published

on

பண்டாரவளை – உடுகும்பல்வெல சரணாலயம் அருகே காட்டுத்தீ!

பண்டாரவளை, அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவுக்குச் சொந்தமான உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள செங்குத்தான சரிவைக் கொண்ட மலைத்தொடரின் புல்வெளியில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ இன்னும் பரவி வரும் நிலையில், தியத்தலாவ இராணுவ வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வனவிலங்கு சரணாலயத்திற்குள் தீ பரவுவதைத் தடுக்க வன பாதுகாப்பு அதிகாரிகள் தீ தடுப்பு வேலியை வெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

இதுவரை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயில் அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த காற்று, வறண்ட வானிலை மற்றும் செங்குத்தான சரிவு காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version