இலங்கை
பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்தவருக்கு நேர்ந்த கதி
பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்தவருக்கு நேர்ந்த கதி
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்த ஒருவரைப் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார்.
தீபக் மஹாவர் என்ற 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ளவராவார்.
பர்பத்புரா கிராமத்தில், ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதைப் பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து அங்குச் சென்ற அவர், அந்த விஷப்பாம்பை பிடித்துள்ளார்.
பின்னர் குறித்த விஷப் பாம்பை அவர் கழுத்தில் போட்டு உந்துருளியில் செல்லும் போது காணொளி எடுத்துள்ளார்.
இந்த நிலையில் விஷப்பாம்பு தீபக் மஹாவரை தீண்டியுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.