இந்தியா

புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: நேரில் வாழ்த்து சொன்ன புதுச்சேரி முதல்வர்

Published

on

புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: நேரில் வாழ்த்து சொன்ன புதுச்சேரி முதல்வர்

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் செயல்பட்டு வருபவர் புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்சி ஆனந்த். இன்று அவர் தனது பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி மாநில முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினரால் கட் அவுட்கள், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புஸ்சி ஆனந்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் இருந்து வந்திருந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. டி. ஆறுமுகம் துணை சபாநாயகர் ராஜவேலுடன் ஆனந்தின் இல்லத்திற்கு வந்த அவர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஆனந்தின் நெற்றியில் விபூதி இட்டு வாழ்த்தினார். மேலும் பிறந்தநாள் கொண்டாடிய புஸ்சி ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் பெற்றார். தொடர்ந்து வாசல் வரை வந்து முதலமைச்சர் ரங்கசாமியை புஸ்சி ஆனந்த் வழி அனுப்பி வைத்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version