சினிமா
மற்ற தயாரிப்புகளில் நடிக்க மாட்டேன்…!உலக நாயகன் கமல்ஹாசன் தீர்மானம்..!
மற்ற தயாரிப்புகளில் நடிக்க மாட்டேன்…!உலக நாயகன் கமல்ஹாசன் தீர்மானம்..!
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனிமேல், அவர் பிற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்கமாட்டார் என்றும், தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலமாக மட்டும் தான் நடிப்பார் என்றும் உறுதி செய்துள்ளார்.இந்த முடிவுக்குப் பின்னணி, சமீபத்திய திரைப்படமான இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட சம்பளத் தகராறு மற்றும் பணம் தொடர்பான சிக்கல்கள் என கூறப்படுகிறது. இந்த அனுபவங்கள், கமல்ஹாசனை எதிர்காலத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தை மட்டுமே நம்பிச் செயல்பட வைக்கும் முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது.இந்நிலையில், கமல்ஹாசன் தனது புதிய திரைப்படத்திற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளார். அன்பறிவு இயக்கும் புதிய படம் விரைவில் பூஜையுடன் தொடங்கவுள்ளது. இது ஒரு பரபரப்பான மற்றும் வித்தியாசமான முயற்சியாகும் என கூறப்படுகிறது. படத்தின் கதாநாயகியாக முதலில் சாய் பல்லவி யாராக இருக்கலாம் என யோசிக்கப்பட்டது. ஆனால், ‘ராமாயணா’ உள்ளிட்ட பெரும் திட்டங்களில் பிஸியாக இருப்பதால், அவரை நடிக்க வைக்க முடியவில்லை. அதையடுத்து, ருக்மணி வசந்த் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் போன்ற நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்டனர். தற்போது கல்யாணியுடன் பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருவதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.