இலங்கை

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

Published

on

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரத்தில் நொச்சியாகம, அந்தரவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.

Advertisement

அந்தரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கோழி கூடுகளை மூடுவதற்கு சென்றிருந்த போது கோழி கூடுகளை சுற்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியை தவறுதலாக தொட்டதால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் நொச்சியாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில்  அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version