இலங்கை
மூளையில் இரத்தக்கசிவு; குடும்பப்பெண் மரணம்
மூளையில் இரத்தக்கசிவு; குடும்பப்பெண் மரணம்
காய்ச்சல் என மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பப் பெண்ணொருவர் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியைச் சேர்ந்த கணேஸ்வரன் திகழ்மதி (வயது-45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கடந்த 14ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் அச்சுவேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு மூளையில் இரத்தக்கட்டி உள்ள விடயம் தெரியவந்தது. இந்த நிலையில் அவருக்கு 15ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங் கம் மேற்கொண்டார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.