இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு சபாநாயகர் திடீர் விஜயம் ; நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு

Published

on

யாழ்ப்பாணத்திற்கு சபாநாயகர் திடீர் விஜயம் ; நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, யாழ்ப்பாணத்திற்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் இதன் போது சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பகுதிகளை நேரில் ஆராய்வதற்காக அவர் இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

அதன்படி  யாழுக்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் முற்பகல் யாழ்ப்பாணம் கோட்டைக்கு சென்று பார்வையிட்டிருந்தார்.

அங்குள்ள பகுதிகளையும் வரலாற்று சின்னங்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்தார். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தின் பிரபலமான பொதுநூலகத்தையும் நேரில் சென்று ஆராய்ந்தார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version