இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள அன்னபூரணி அம்மா ; வெடிக்கும் எதிர்ப்புகள்

Published

on

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள அன்னபூரணி அம்மா ; வெடிக்கும் எதிர்ப்புகள்

தன்னை ஆதிபாராசக்தியின் வடிவம் என கூறிகொண்டிருக்கும் இந்தியாவின் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான அன்னபூரணி அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும்,அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவரின் வருகைக்கு யாழில் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

Advertisement

தமிழ் நாட்டின் திருவண்ணாமலையில் ஆச்சிரமம் நடத்தும் அன்னபூரணி தன்னை ஆதிபாராசக்தியின் வடிவம் என கூறி பலருக்கும் ஆசி வழங்கி வருகின்றார்.

தனது தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அன்னபூரணி தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version