இலங்கை
யாழ் தையிட்டி விகாரைக்கு விரைவில் முற்றுப்புள்ளி
யாழ் தையிட்டி விகாரைக்கு விரைவில் முற்றுப்புள்ளி
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், “தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்,” என உறுதியளித்தார்.
அதேவேளை வியாழக்கிழமை (17) மாலை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் மற்றும் சபை உறுப்பினர்களும் தையிட்டிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
தையிட்டிக்கு தனித்தனி விஜயமாக வந்திருந்த இரு குழுவினரும் அதேவேளை விகாரை வளாகத்தில் சந்தித்து, பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.