இலங்கை
யாழ். வந்த தென்னிந்திய பாடகர் ஶ்ரீநிவாஸ்!
யாழ். வந்த தென்னிந்திய பாடகர் ஶ்ரீநிவாஸ்!
யாழ். மருத்துவபீட மாணவர்களுக்கான பேருந்து கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து இன்று யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக பாடகர்கள் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது மகள், zeetamil சரிகமபா பாடகர்கள் அக்சையா, ஜீவன் ஆகியோர் வந்தடைந்தனர்.
பாடகர் ஸ்ரீநிவாஸ் இந்த நிகழ்ச்சிக்கான எந்த ஒரு பணத்தையும் பெற்றுக்கொள்ளாது இலவசமாக பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.