சினிமா

ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நெப்போலியன்!! வைரல் வீடியோ..

Published

on

ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நெப்போலியன்!! வைரல் வீடியோ..

நடிகரும் முன்னாள் அமைச்சருமான நடிகர் நெப்போலியன், தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு பிரமாண்டமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தார். தன் மகன் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் தன் மகனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து வைத்தார்.இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் போன்றவர்கள் அமெரிக்காவிற்கு ஒரு நிகழ்ச்சி சென்றபோது நெப்போலியன் வீட்டிற்கு சென்று அவரின் மகன் தனுஷை சந்தித்து சென்றனர்.மகன் திருமணத்திற்கு நெப்போலியன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பத்திரிக்கை வைத்திருந்தார். ஆனால் ரஜினியால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.இதனையடுத்து சென்னை வந்துள்ள நெப்போலியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சால்வை அணிவித்து பேசியிருக்கிறார்.அதில், மகன் திருமணம் மற்றும் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெப்போலியன் ரஜினிகாந்தை சந்தித்த வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version