வணிகம்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்; வந்தே பாரத் ரயில்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் புக் செய்யும் வசதி

Published

on

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்; வந்தே பாரத் ரயில்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் புக் செய்யும் வசதி

வந்தே பாரத் ரயில்கள் புறப்படும் இடத்திலிருந்து புறப்பட்டு விட்டால், இருக்கைகள் காலியாக இருந்தாலும் கூட வழியில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் பயண சீட்டு முன்பதிவு செய்ய முடியாது. இந்தநிலையில், தற்போது 8 வந்தே பாரத் ரயில்களுக்கு இருக்கைகள் காலியாக இருந்தால் வழியில் உள்ள ரயில் நிலையங்கள் உள்ள பயணிகள் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயண சீட்டு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி இன்று (ஜூலை 17) முதல் அமலுக்கு வருகிறது.  சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு இரு மார்க்கங்களிலும் (20627/20628) மற்றும் மதுரை – பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கும் (20671) இந்த புதிய வசதி மூலம் பயண சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மங்களூர் – திருவனந்தபுரம் – மங்களூர், கோயம்புத்தூர் – பெங்களூரு, மங்களூர் – கோவா மட்கான், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் விஜயவாடா வந்தே பாரத் ரயில்களுக்கும் இந்த புதிய வசதி மூலம் பயணிச்சிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version