இலங்கை

ரயில் மோதி காட்டு யானை உயிரிழப்பு

Published

on

ரயில் மோதி காட்டு யானை உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் மோதி காட்டு யானை இன்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை உயிரிழந்தது. 

இந்த விபத்து கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

இந்த யானை அதிகாலை 3 மணி முதல் கிராமத்தில் சுற்றித் திரிந்து, அப்பகுதியில் உள்ள நெல் வயல்களுக்குள் நுழைவது வழக்கமாக கொண்டிருந்துள்ளது.

இன்யைதினம்  யானை வந்தபோது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும், ஆனால் அந்நேரத்தில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய வாரங்களில் அடிக்கடி யானை கிராமத்திற்குள் வந்து சென்றுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் எடுக்கத் தவறியுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயர சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version