இலங்கை
விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை!
விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை!
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது,
எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கிமீ சுற்றளவில் 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் அல்லது எந்தவொரு வான்வழிப் பொருளையும் பறக்கவிடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது .
விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு மற்றும் விமானங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டும் வகையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்தையடுத்து பல விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்களில் சிக்கிவருவதால் பயணிகளுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் முகமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.