இலங்கை
விற்பனை நிலையம் ஒன்றில் சற்று முன்னர் தீ விபத்து
விற்பனை நிலையம் ஒன்றில் சற்று முன்னர் தீ விபத்து
நுவரெலியா – ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு கடையில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியுள்ளது.
மேலும் ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லையெனவும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.