வணிகம்
10.90% வட்டி… பெர்சனல் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்; மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
10.90% வட்டி… பெர்சனல் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்; மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் குறைத்ததை தொடர்ந்து, வங்கிகளும் தங்கள் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளன. இருப்பினும், இந்த மாற்றங்கள் வீட்டு மற்றும் கார் கடன்கள் போன்ற ஒரு சில வகைக் கடன்களில் மட்டுமே பிரதிபலிக்கின்றன. தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் பெரும்பாலும் நிலையானதாகவே இருக்கின்றன. அதாவது, நீங்கள் தனிநபர் கடனை ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் பெற்றிருந்தால், கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதும் அதே விகிதம் நீடிக்கும்.தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, வெவ்வேறு வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்களை ஒப்பிடுவது மிக அவசியம். இந்தியாவிலுள்ள சில முக்கிய வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:சமீபத்திய தனிநபர் கடன் வட்டி விகிதங்கள்:ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank): இங்கு, 10.90 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக, ரூ. 6,500 மற்றும் வரிகள் ஆகியவை செயலாக்கக் கட்டணமாக வசூலாகின்றன.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank): இந்த தனியார் துறை வங்கி ஆண்டுக்கு 10.80 சதவீதம் முதல் 16.50 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. செயலாக்கக் கட்டணங்கள், கடன் தொகையில் 2 சதவீதம் இருக்கக் கூடும்.கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank): இந்த தனியார் துறை வங்கி ஆண்டுக்கு 10.99 சதவீதம் மற்றும் அதற்கு மேல் வட்டி விகிதத்தை வசூலிக்கிறது.ஃபெடரல் வங்கி (Federal Bank): இந்த தனியார் துறை வங்கி ஆண்டுக்கு 11.49 சதவீதம் முதல் 14.49 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda – BOB): இந்த அரசுத் துறை வங்கி ஆண்டுக்கு 11.25 முதல் 18.30 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. இந்த வட்டி விகிதம் கடன் வாங்குபவரின் வேலை (அரசு அல்லது தனியார் துறை) மற்றும் அவர்களின் கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India – SBI): நாட்டின் மிகப்பெரிய அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆண்டுக்கு 10.30 முதல் 15.30 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.