பொழுதுபோக்கு

3 சீன்ல மட்டும் செருப்பு போடுங்க… மற்ற சீன்ல ஷூ போட்டுக்கலாம்; முதல் நாள் ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆர் சிவக்குமாருக்கு சொன்னது!

Published

on

3 சீன்ல மட்டும் செருப்பு போடுங்க… மற்ற சீன்ல ஷூ போட்டுக்கலாம்; முதல் நாள் ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆர் சிவக்குமாருக்கு சொன்னது!

எம்.ஜி.ஆர் மற்றும் சிவக்குமார் இணைந்து நடித்த முதல் திரைப்படம் 1967 இல் வெளியான காவல்காரன் ஆகும். இதில் எம்.ஜி.ஆர் அண்ணனாகவும், சிவக்குமார் அவரது தம்பியாகவும் நடித்தனர். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் உடன் சிவக்குமார் இணைந்து நடித்த அனுபவங்களை அன்னோடிஸ்டு எர்த் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, சுரேந்தர் என்ற முக்கிய கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவக்குமாருக்கு பட வாய்ப்பும் அடுத்தடுத்து கிடைத்து வந்தது.அடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் நடித்த சிவக்குமாருக்கு ஏ.வி.எம். தயாரிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் முதல்முறையாக இணைந்து நடிப்பதால் அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்த சிவக்குமாருக்கு எம்.ஜி.ஆர் அழைத்து தன்னுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளார்.சிவாஜி படத்தில் நடித்துக்கொண்டிருந்த்தால், அந்த படத்தில் நடிக்க மறுத்த சிவக்குமார் அடுத்து, காவல்காரன் என்ற படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக நடித்திருந்தார். இதுதான் எம்.ஜி.ஆர் – சிவக்குமார் இணைந்து நடித்த முதல் படம்.1967-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி்.ஆர் அண்ணனாகவும், சிவக்குமார் அவரின் தம்பியாகவும் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக முதலில் சிவக்குமார் வந்தபோது அவரது உயரத்தை அளந்துள்ளார் எம்.ஜி.ஆர்.காவல்காரன் படப்பிடிப்பின் போது, எம்.ஜி.ஆர் தனது உயரம் குறித்து கேட்டதாகவும், சில காட்சிகளில் சிவகுமார் செருப்பு அணியவும், மற்ற காட்சிகளில் ஷூ அணியவும் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இது எம்.ஜி.ஆரின் உயரத்திற்கு ஏற்றவாறு சிவகுமாரின் உயரத்தைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதையும் அவர் விளக்குகிறார்.எம்.ஜி.ஆர் 1966 நவம்பர் 14 அன்று படப்பிடிப்பிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டபோது சிவகுமார் அவரை முதன்முதலில் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆரின் அணுகுமுறை: எம்.ஜி.ஆர் ஒரு நடிகரின் தனிப்பட்ட குணாதிசயங்கள், ஒழுக்கம், நடத்தைகள் போன்றவற்றை முதலில் கவனிப்பார் என்று சிவகுமார் கூறுகிறார்.சிவகுமார் படப்பிடிப்பிற்குச் சென்றவுடன், எம்.ஜி.ஆர் அவரது உயரம் குறித்து கேட்டதாகவும், சில காட்சிகளில் செருப்பு அணியவும், மற்ற காட்சிகளில் ஷூ அணியவும் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிடுகிறார். இது எம்.ஜி.ஆரின் உயரத்திற்கு ஏற்றவாறு சிவகுமாரின் உயரத்தைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், ஒரு இன்ச் வித்தியாசம் கூட தெரியாமல் இருக்க அவர் கவனம் செலுத்தியதாகவும் கூறுகிறார்.பொதுவாக தனது படங்களில் நடிக்கும் நடிகர்கள் குறித்து முழு விபரங்களையும் தெரிந்துகொண்டு தான் எம்.ஜி.ஆர் வாயப்பு கொடுப்பார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் சிவக்குமாருக்கு வாய்ப்பு கொடுத்தபோது,  முதலில் உயரத்தை அளந்த எம்.ஜி.ஆர், இந்த படத்தில் 3, 7 மற்றும் 93-வது காட்சியில் நீங்கள் செருப்பு அணிந்துகொண்டு நடியுங்கள். மற்ற காட்சிகளில் ஷூ அணிந்துகொண்டு நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.எம்.ஜி.ஆர் எதற்காக அப்படி சொன்னார் என்றால், சிவக்குமார் மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம் உள்ளவர்கள். இருவரும் அண்ணன் தம்பியாக நடிப்பதால், ஒரே காட்சியில் தோன்றும்போது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இவர்கள் நடிப்பில் வெளியான காவல்காரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version