பொழுதுபோக்கு
3 மாத கர்ப்பிணியாக குத்து டான்ஸ்; டெலிவரிக்கு முன் வரை நடிப்பு; பெண்கள் ஹெல்த் குறித்து திருமதி செல்வம் நடிகை ஓபன் டாக்!
3 மாத கர்ப்பிணியாக குத்து டான்ஸ்; டெலிவரிக்கு முன் வரை நடிப்பு; பெண்கள் ஹெல்த் குறித்து திருமதி செல்வம் நடிகை ஓபன் டாக்!
திருமதி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை லதா ராவ், தனது பிரசவ அனுபவங்கள், தாய்மை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து கலாட்டா பிங்கிற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். இதில் கர்ப்ப காலத்தில் தான் குத்து டான்ஸ் ஆடியது, பிரசவத்திற்கு முன் வரை நடித்தது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.லதா ராவ், இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். சின்னத்திரையில் “அப்பா”, “திருமதி செல்வம்” போன்ற பிரபலமான தொடர்கள் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். சின்னத்திரையில் கிடைத்த புகழைத் தொடர்ந்து, வெள்ளித்திரையிலும் கால் பதித்த லதா ராவ், “தில்லாலங்கடி”, “நிமிர்ந்து நில்”, “யங் மங் சங்” போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். “சுழல்: த வோர்டெக்ஸ்” போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.லதா ராவ் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) சொந்தக் குரலில் பேசி நடிக்கும் திறன் கொண்டவர். நடிகர் ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் லதா ராவ் தனது ஆரோக்கியம் மற்றும் பிரசவம் குறித்து பகிர்ந்துள்ளார். லதா ராவ் தனது இரண்டு பிரசவங்களும் சாதாரணமாக இல்லை என்றும் அதனால் தனக்கு சிசேரியன் செய்யப்பட்டதாகவும் கூறினார். பிரசவத்திற்கு நான்கு நாட்கள் முன்னாடி வரை குத்து டான்ஸ் ஆடியதாகவும் சிசேரியன் முடிந்து 25 நாட்கள் கழித்து நடிக்க ஆரம்பித்ததாகவும் கூறினார். பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு மற்றும் பிரசவத்தின் போது கொடுக்கப்பட்ட ஸ்பைனல் ஊசியின் வலி குறித்தும் அவர் பேசினார். மேலும் நான் எனது கர்ப்பகாலத்தை மிகவும் மகிழ்ச்சியாக கழித்ததாகவும் மருத்துவரிடமே 2 வாரம் சிசேரியனை தள்ளிப்போடுமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.லதா ராவ், தனது கர்ப்ப காலத்தில் கூட குத்து டான்ஸ் ஆடியது, மற்றும் பிரசவத்திற்கு முந்தைய நாள் வரை தான் நடித்து வந்ததையும் வெளிப்படுத்தினார். தாய்மை குறித்துப் பேசிய லதா, தனது மகள் முதல் முறையாக தனியாக விமானத்தில் பயணம் செய்தபோது, அவர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பற்றிப் பெருமையுடன் கூறினார்.தனது மகள்களுக்கு “குட் டச் மற்றும் பேட் டச்” பற்றி 2 வயதிலேயே சொல்லி கொடுத்ததாகவும் கூறினார். தனது உடல் எடை மற்றும் அழகு அப்படியே இருப்பதற்கு காரணம் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதாகவும் அவர்களுடன்தான் மிகந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். அவர்களை சமாலிப்பதாலேயே எனது உடல் எடை அப்படியே இருப்பதாக தெரிவித்தார்.