இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விரைவில் கைதுகள்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Published

on

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விரைவில் கைதுகள்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

  உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள் அண்மைக்கால விசாரணைகளில் தெரியவந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்று அமைச்சர் நளிந்தவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா உட்பட தேவையான நபர்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயத்தில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

Advertisement

இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்.

விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம். விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது விரைவுபடுத்தப்பட்டு, நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version