வணிகம்
எஃப்.டி-க்கு 8.5% வரை ரிட்டன்… ஆஃபர்களை அள்ளித் தரும் இந்த வங்கிகள்
எஃப்.டி-க்கு 8.5% வரை ரிட்டன்… ஆஃபர்களை அள்ளித் தரும் இந்த வங்கிகள்
நிலையான வைப்பு நிதி (FD) வட்டி விகிதங்கள் மீண்டும் சரிந்து காணப்படுகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி போன்ற முக்கிய வங்கிகள் ஜூன் 2025 முதல் 10 – 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சமீபத்திய வட்டி குறைப்பு, ஜூலை 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. 46 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கான வைப்பு நிதிகளுக்கு, பொது மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்கும் வட்டி விகிதங்கள் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாக மூன்று முறை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததையடுத்து இந்த வங்கிகளின் வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பரவலான வட்டி விகித சரிவு இருந்தபோதிலும், சில வங்கிகள் இன்னும் அதிக வைப்பு நிதி வட்டி விகிதங்களை வழங்குகின்றன. குறிப்பாக, சந்தை அபாயத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் தங்கள் நிதியை குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்ய தயாராக இருந்தால், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.ஜூலை 16 நிலவரப்படி, சில ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் 18 மாத காலத்திற்கு 8.50% வட்டி வழங்குகிறது. சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ள எஃப்.டி-களுக்கு 8.40% வழங்குகிறது. தனியார் துறை வங்கிகளில் பந்தன் வங்கி 7.40% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் 3 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிகளுக்கு பொருந்தும். மேலும், வங்கி கிளை அல்லது முதலீட்டு முறைக்கு ஏற்ப சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.அதிக வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்: ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank):அதிகபட்ச விகிதம்: 888 நாட்களுக்கு 7.60%ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank):அதிகபட்ச விகிதம்: 5 வருடங்களுக்கு 8.20%1 வருடம்: 7.50%, 3 வருடம்: 7.75%, 5 வருடம்: 8.20%ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (slice Small Finance Bank):அதிகபட்ச விகிதம்: 18 மாதம் 1 நாள் முதல் 18 மாதம் 2 நாட்கள் வரை 8.50%1 வருடம்: 6.75%, 3 வருடம்: 8.25%, 5 வருடம்: 7.75%சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank):அதிகபட்ச விகிதம்: 5 வருடங்களுக்கு 8.40%1 வருடம்: 7.50%, 3 வருடம்: 8.15%, 5 வருடம்: 8.40%உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank):அதிகபட்ச விகிதம்: 2 வருடங்களுக்கு 7.75%1 வருடம்: 7.65%, 3 வருடம்: 7.20%, 5 வருடம்: 7.20%யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank):அதிகபட்ச விகிதம்: 1001 நாட்களுக்கு 7.75%1 வருடம்: 6.50%, 3 வருடம்: 7.25%, 5 வருடம்: 7.25%உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank):அதிகபட்ச விகிதம்: 2 முதல் 3 வருடங்களுக்கு 8%1 வருடம்: 6.25%, 3 வருடம்: 8%, 5 வருடம்: 7.50%அதிக வட்டி வழங்கும் தனியார் வங்கிகள்:பந்தன் வங்கி (Bandhan Bank):அதிகபட்ச விகிதம்: 2 வருடம் முதல் 3 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 7.40%1 வருடம்: 7.25%, 3 வருடம்: 7.25%, 5 வருடம்: 5.85%சி.எஸ்.பி வங்கி (CSB Bank):அதிகபட்ச விகிதம்: 13 மாதங்களுக்கு 7.40%1 வருடம்: 5%, 3 வருடம்: 5.75%, 5 வருடம்: 5.75%டி.சி.பி வங்கி (DCB Bank):அதிகபட்ச விகிதம்: 25 முதல் 26 மாதங்களுக்கு 7.40%1 வருடம்: 7%, 3 வருடம்: 7%, 5 வருடம்: 7%இந்த வட்டி விகிதங்கள், முதலீட்டாளர்கள் தங்கள் நிதியை எங்கு முதலீடு செய்வது என்பது குறித்த முடிவுகளை எடுக்க உதவும். இருப்பினும், ஒவ்வொரு வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு படித்து பார்ப்பது அவசியம் ஆகும்.