பொழுதுபோக்கு

காலில் எலும்பு முறிவு, ஒரு வருடம் படுக்கை; பாதியில் நின்ற திருடாதே: ஏளன பேச்சுக்கு எட்டி உதைத்து பதில் தந்த எம்.ஜி.ஆர்!

Published

on

காலில் எலும்பு முறிவு, ஒரு வருடம் படுக்கை; பாதியில் நின்ற திருடாதே: ஏளன பேச்சுக்கு எட்டி உதைத்து பதில் தந்த எம்.ஜி.ஆர்!

தமிழ் க்ளாசிக் சினிமாவில், நட்சத்திர ஜோடியாக இருந்த எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், திருடாதே படம் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது ஏன் என்பது குறித்து நடிகை சரோஜா தேவி கூறியுள்ளார்.நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக 1936-ம் ஆண்டு சதிலீலாவதி படத்தில் அறிமுகமான எம்.ஜி.ஆர் 11 வருட போராட்டத்திற்கு பிறகு, 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதன் பிறகு ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், தனது திருடாதே படத்தில் சரோஜா தேவியை நாயகியாக நடிக்க வைத்துள்ளார். இந்த படம் 1961-ம் ஆண்டு வெளியாகியுள்ளது.இந்தியில் வெளியான பாக்கெட் மார் என்ற படத்தின் ரீமேக்காக வெளியான திருடாதே படம் எம்.ஜ.ஆர் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. படத்தில் நம்பியார், கே.ஏ.தங்கவேலு, நாகையா, எம்.சரோஜா, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாடு இசையமைக்க, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், உள்ளிட்ட பலர் பாடல்கள் எழுதியிருந்தனர். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, பாதி ஷூட்டிங் எடுக்கப்பட்ட நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் ஒரு ட்ராமாவுக்கு போயிருந்தபோது அவரது கால் உடைந்துவிட்டது. அந்த காலக்கட்டத்தில் வசதிகள் இல்லாததால், டாக்டர் நடராஜன் என்பவர், அவர் காலில் பிளாஸ்டிக் கட்டு போட்டுவிட்டு ஒரு வரும் ரெஸ்ட் எடுக்க வேண்டும். நீங்கள் சரி என்று சொன்னால் தான் நான் வைத்தியம் பார்ப்பேன். நீங்கள் இப்பவே போய் ஏதாவது ஆகிவிட்டால் என்னை தவறாக பேசுவார்கள் என்று கூறியுள்ளார்.அவரின் பேச்சை கேட்டு எம்.ஜி.ஆரும் ஒரு வரும் ரெஸ்டில் இருந்துள்ளார். அப்போது சரோஜா தேவியும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் அவரை பார்க்க சென்றுள்ளனர். ஒரு வருடம் ஆன பின்பு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அந்த டாக்ரை அழைத்து பெரிய பாராட்டுவிழா நடத்தி அதன்பிறகு படப்பிடிப்புக்கு வந்தார். எம்.ஜி.ஆர் ஒரு வருடம் படுக்கையில் இருந்தபோது, அவர் அவ்வளவு தான் இனிமேல் நடிக்கமாட்டார்கள். படத்தில் சண்டைககாட்சியில் நடிக்க கால் முக்கியம். ஆனால் அவருக்கு அங்குதான் அடி பட்டிருக்கிறது. அதனால் அவர் படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னார்கள்.அவரை பற்றி பேசிய அனைவரின் வாயை அடைக்கும் வகையில், திருடாதே படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியபோது முதல் ஷாட்டே அவர் சேரை தூக்கி எட்டி உதைத்தார், அதன்பிறகு தாய் சொல்லை தட்டாதே படத்தில் நடித்தோம். அதில் இருந்து எங்களின் ஜோடி தொடங்கிங்கியது என சரோஜா தேவி கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version