பொழுதுபோக்கு

பாலாவே பலருக்கு ஹெல்ப் பண்ணுவாரு; அவருக்கே உதவி செய்த ஒரு நடிகையின் கணவர்: யார் தெரியுமா?

Published

on

பாலாவே பலருக்கு ஹெல்ப் பண்ணுவாரு; அவருக்கே உதவி செய்த ஒரு நடிகையின் கணவர்: யார் தெரியுமா?

மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் நிறைய பணம் இருக்க வேண்டும் என்று ஏராளமானோர் கருதுவது உண்டு. இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு பணத்தையும் கடந்து, ஒரு சேவை மனப்பான்மை வேண்டும். அந்த குணம் இருந்தால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தாராளமாக உதவி செய்யலாம்.இதற்கு சிறந்த உதாரணமாக நடிகர் பாலாவை கூறலாம். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பாலா அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாக பல நிறுவனங்களில் வாய்ப்புக்காக அவர் அடைந்த சிரமங்கள் குறித்து பல மேடைகளில் பாலா பதிவு செய்துள்ளார். அதன் பின்னர், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி இன்று சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு பாலா, தன்னை உயர்த்திக் கொண்டார். இவை அனைத்தும் ஒரே இரவில் சாத்தியமானது கிடையாது. கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் பலனாக அவருக்கு புகழ் கிடைத்துள்ளது.எனினும், தனது நகைச்சுவை திறனை கடந்து மற்றவர்களுக்கு செய்யும் உதவிக்கே பாலாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றன. சினிமாவில் பழம்பெரும் நடிகர்களாக இருந்த சிலர், தங்கள் மருத்துவ தேவைக்காக கஷ்டப்பட்ட போது, தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் உதவி செய்வதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து இருக்கிறது. ஆனால், அவர்களில் பலருக்கு பாலா உதவி செய்துள்ளார். இதற்கு நடிகை பிந்து கோஷுக்கு பாலா செய்த உதவியை உதாரணமாக கூறலாம். இதேபோல், எண்ணற்ற கலைஞர்களுக்கு பாலா உதவி செய்து வருகிறார்.திரைக் கலைஞர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களுக்கு பாலா தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்படும் பலரை சமூக ஊடகம் வாயிலாக கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான பல உதவிகளை பாலா செய்கின்றார். இது தொடர்பான பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பாலாவின் இந்த செயலுக்கு மக்கள் இடையே ஆதரவு இருந்தாலும், இவற்றை விமர்சனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், விமர்சனங்களை கடந்து தனது பணியை பாலா செய்து வருகிறார். அதுவே பாலாவின் வெற்றி என்று பலர் போற்றுகின்றனர். இந்த சூழலில், பாலாவிற்கு நடிகை ரம்பாவின் கணவர் மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் உதவி செய்த தருணத்தை, அவரே தெரிவித்துள்ளார். கலா மாஸ்டரின் 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை போற்றும் விதமாக சினி உலகம் யூடியூப் சேனலில், சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்ட பாலா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.  அப்போது, “நடிகை ரம்பாவின் கணவர் மற்றும் கலா மாஸ்டர் இருவரும் ஒரு முறை என்னை நேரில் அழைத்தனர். அப்போது, ரூ. 3 லட்சத்தை என்னிடம் கொடுத்தனர். அந்த பணத்தில் எனக்கு டிரஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், அந்தப் பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது எனவும், எனக்கு மட்டுமே தேவையான செலவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இவர்கள் இருவரும் எனக்கு செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்” என நடிகர் பாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version