இலங்கை

யாழில் நடைபெற்ற மாணவரக்ளுக்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

Published

on

யாழில் நடைபெற்ற மாணவரக்ளுக்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கற்பதற்கான வட்டியில்லாக் கடன் திட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோா்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தமருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அரசாங்க அவர்கள், கல்வி அமைச்சின் கீழ் இயங்கம் மாணவர் கடன் பிரிவானது இலங்கையில் கா.பொ.த உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தால் அரசு சாரா அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப் படிப்பை தொடர வட்டி இல்லா கடன் திட்டத்தை செயற்படுத்துகின்றது எனவும், அதற்கான இவ் விழிப்புணர்வில் தெரிவிக்கப்படும் தெளிவூட்டல்களை நன்கு கிரகித்து கேட்டுக் கொள்ளுமாறும் தெரிவித்தார். 

Advertisement

மேலும் எமது மாணவர்கள் இத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காககொழும்பிலிருந்து வருகை தந்த கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர், பல்கலைக் கழக போராசிரியர் கள் ஆகியோருக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் தமக்குரிய கற்கை நெறியினை தெரிவு செய்து, எதிர்காலத்தில் ஒளிமயமாக வாழ வாழ்த்துவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இவ் விழிப்புணர்வு நிகழ்விற்கு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் எச். டி. சந்திம ஜானகி, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சி. மகேஷ் எதிர்சிங்ஹ, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் நிர்மலி பலிவற்ற உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

இத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை www.studentloan.mohe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் ஏனைய விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத் விழிப்புணர்வு தெளிவூட்டலில் உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version