உலகம்

வியட்நாமில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் மரணம்

Published

on

வியட்நாமில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் மரணம்

தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக, ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் அந்த பகுதிக்கு சென்று இயற்கை அழகை கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றனர். தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சூறைக்காற்றுடன், கனமழை பெய்தது.

இதனால், படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் தத்தளித்த 12 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 23 பேர் கடலில் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 

Advertisement

கடலில் மாயமான எஞ்சியோரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version