இலங்கை
இந்த காய்கறிகளை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு கூடுமாம்
இந்த காய்கறிகளை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு கூடுமாம்
ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. இதன் அளவு குறைவாக இருந்தால், இரத்த சோகை (Anemia) ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை சீராக பரிமாற முடியாமல், பலவீனம், சோர்வு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இப்படி ரத்தத்தின் அளவை உடலில் அதிகரிக்க கூடிய சில உணவுப் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
சாதாரண ஹீமோகுளோபின் எண்ணிக்கை ஆண்களுக்கு ஒரு டெசிலிட்டருக்கு 14 முதல் 17 கிராம் மற்றும் பெண்களுக்கு 12 முதல் 15 கிராம் வரை இருக்கும்.
இதில் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது. அதோடு ஃபோலேன் இருப்பதால் இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. பீட்ரூட்டில் இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆன்ஸிடன்ட் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
இரும்பு சத்து நிறைந்த பருப்பு வகைகள் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மாதுளையில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைவாக இருப்பதால் இது இரும்புச் சத்தை துரிதமாக உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது
[JK1DTO
]
புரக்கோலி இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி, ஃபோலேட் நிறைந்த பூ என்பதால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. அதோடு இரும்பு சத்து உறிஞ்சுவதையும் மேம்படுத்துகிறது. நட்ஸ் வகைகளில் பாதாமுக்கு எப்போதும் தனி இடம் கொடுப்பதற்கு அதில் கொட்டிக்கிடக்கும் நன்மைகளுக்காகத்தான். அதில் ஒன்றுதான் இரும்பு சத்து அதோடு விட்டமின் ஈ உள்ளது. எனவே ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை பராமரிக்கிறது.