இலங்கை

இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published

on

இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

காவல் துறையில் அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் குறித்து பதில் காவல் துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார்.

30% காவல்துறை அதிகாரிகள் மட்டுமே நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்றும்,பெரும்பான்மையானவர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் அல்லது முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

சப்ரகமுவ மாகாணத்தில் காவல்துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்கு பாடசாலை பொருட்களை வழங்கும் நிகழ்வின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

“காவல் துறை அதிகாரிகளின் நிலையைப் பார்த்தால், சுமார் 20% முதல் 40% பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 30% பேர் இன்னும் சரியான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. மீதமுள்ள 30% பேர் மட்டுமே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

Advertisement

வேலை தொடர்பான மன அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பிற காரணிகளால் பல அதிகாரிகள் மத்தியில் தொற்றா நோய்கள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காவல்துறை சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அடுத்த ஆண்டு புதிய சம்பள அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Advertisement

[GOWRFNN,

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version