வணிகம்

பெர்சனல் லோன் வாங்க போறீங்களா? 9% முதல் வட்டி; 1% பிராஸசிங் ஃபீஸ்: டாப் வங்கிகளின் லிஸ்ட்

Published

on

பெர்சனல் லோன் வாங்க போறீங்களா? 9% முதல் வட்டி; 1% பிராஸசிங் ஃபீஸ்: டாப் வங்கிகளின் லிஸ்ட்

சில சமயங்களில் எதிர்பாராத செலவுகள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கும். மருத்துவ தேவை, குடும்ப நிகழ்வு அல்லது வேறு ஏதேனும் திடீர் பண தேவை ஏற்படலாம். இது போன்ற சூழ்நிலைகளில், உடனடியாக பணம் தேவைப்படும் போது என்ன செய்வது என்று யோசிப்பது இயல்பு. இத்தகைய நேரங்களில் வங்கிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களில் இருந்து தனி நபர் கடன் பெறுவது, உங்களுடைய பண தேவையை பூர்த்தி செய்ய உதவும்.தனிநபர் கடன் பெறுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள்:பாதுகாப்பு: வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதால், உங்கள் நிதித் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.தெளிவான விதிமுறைகள்: கடன் தொகை, வட்டி விகிதம், திருப்பி செலுத்தும் காலம் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.தேர்வு செய்யும் வசதி: உங்கள் வசதிக்கேற்ப கடனை திருப்பி செலுத்தும் காலத்தை (repayment tenure) தேர்வு செய்யலாம். இது உங்கள் மாதாந்திர தவணையை (இ.எம்.ஐ) திட்டமிட உதவும்.வட்டி விகிதங்கள்: வங்கிகளுக்கு இடையே உள்ள போட்டித் தன்மை காரணமாக, நீங்கள் பலதரப்பட்ட வட்டி விகிதத்தில் கடனைப் பெற முடியும்.தனிநபர் கடன் வாங்கும்போது, மாதாந்திர தவணை எவ்வளவு வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது, அசல் தொகை மற்றும் வட்டி ஆகியவற்றின் ஒரு பகுதி. கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் திருப்பி செலுத்தும் காலம் ஆகியவற்றை பொறுத்து மாதாந்திர தவணை மாறுபடும்.மேலும், கடன் செயலாக்கக் கட்டணம் (processing fees) போன்ற சில தொகைகள் தனிநபர் கடனில் விதிக்கப்படலாம். இந்தக் கட்டணங்களையும் மனதில் கொண்டு, உங்கள் நிகர மாதாந்திர தவணை எவ்வளவு என்பதை கணக்கிடுவது முக்கியம். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வலைதளங்களில் மாதாந்திர தவணை கால்குலேட்டர்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி உங்கள் மாதாந்திர தவணையை எளிதாக கணக்கிடலாம்.வங்கிகள், நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் மற்றும் செயலாக்கக் கட்டணம்:கடன் வழங்கும் வங்கிவட்டி விகிதம் (ஆண்டுக்கு %)இ.எம்.ஐ – கடன் தொகை: ரூ. 5 லட்சம் (5 வருட காலம்)இ.எம்.ஐ – கடன் தொகை: ரூ. 1 லட்சம் (5 வருட காலம்)செயலாக்கக் கட்டணம் (% கடன் தொகையில்)யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா10.35-14.45ரூ. 10,710 – ரூ. 11,751ரூ. 2,142 – ரூ. 2,3501% வரை (அதிகபட்சம் ரூ. 7,500)யூகோ பேங்க்10.20-13.20ரூ. 10,673 – ரூ. 11,428ரூ. 2,135 – ரூ. 2,2861% வரை (குறைந்தபட்சம் ரூ. 750)டாடா கேப்பிடல்11.50 முதல்ரூ. 10,996 முதல்ரூ. 2,199 முதல்4% வரைஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா10.30-15.30ரூ. 10,697 – ரூ. 11,974ரூ. 2,139 – ரூ. 2,3951.5% வரை (குறைந்தபட்சம் ரூ. 1,000; அதிகபட்சம் ரூ. 15,000)பஞ்சாப் நேஷனல் பேங்க்10.50-17.05ரூ. 10,747 – ரூ. 12,440ரூ. 2,149 – ரூ. 2,4881% வரைபஞ்சாப் & சிந்து பேங்க்9.85-12.90ரூ. 10,587 – ரூ. 11,351ரூ. 2,117 – ரூ. 2,2700.50%-1%கோடக் மஹிந்திரா பேங்க்10.99 முதல்ரூ. 10,869 முதல்ரூ. 2,174 முதல்5% வரைஇண்டஸ்இண்ட் பேங்க்10.49 முதல்ரூ. 10,744 முதல்ரூ. 2,149 முதல்3.5% வரைஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க்10.50 முதல்ரூ. 10,747 முதல்ரூ. 2,149 முதல்0.75% வரைஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்9.99 முதல்ரூ. 10,621 முதல்ரூ. 2,124 முதல்2%ஐசிஐசிஐ பேங்க்10.80 முதல்ரூ. 10,821 முதல்ரூ. 2,164 முதல்2% வரைஹெச்எஸ்பிசி பேங்க்10.15-16.00ரூ. 10,660-12,159ரூ. 2,132 – ரூ. 2,4322% வரைஹெச்டிஎஃப்சி பேங்க்10.90-24.00ரூ. 10,846 – ரூ. 14,384ரூ. 2,169 – ரூ. 2,877ரூ. 6,500 வரைஃபெடரல் பேங்க்11.99 முதல்ரூ. 11,120 முதல்ரூ. 2,224 முதல்3% வரைசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா10.10-11.90ரூ. 10,648 – ரூ. 11,097ரூ. 2,130 – ரூ. 2,2191% வரைகனரா பேங்க்9.95-15.40ரூ. 10,611 – ரூ. 12,000ரூ. 2,122 – ரூ. 2,4000.25% வரை (அதிகபட்சம் ரூ. 2,500)பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா9.00-13.80ரூ. 10,379 – ரூ. 11,582ரூ.  2,076 – ரூ. 2,3161% வரை (அதிகபட்சம் ரூ. 10,000)  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version