இலங்கை

யாழில் இரு குழுக்களுக்கிடையிலான மோதல்; அதிரடியாக களமிறங்கிய ராணுவ படை

Published

on

யாழில் இரு குழுக்களுக்கிடையிலான மோதல்; அதிரடியாக களமிறங்கிய ராணுவ படை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்னர்.

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்றையதினம் தனி நபர்களிடையே தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

Advertisement

முறைப்பாடு வழங்கப்பட்ட பின்னர் இன்று இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோது பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டது.

Advertisement

இதனால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.அதனையடுத்து ஒரே குழுவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

மூளாயில் இடம்பெற்ற குழு மோதல் மீண்டும் இடம்பெறலாம் என்பதால் அங்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் பாதுகாப்புக்காக பலப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிநபர்களின் மோதல் வலுப்பெற இரண்டு ஊர்களிற்கிடையே இடம்பெற்ற தாக்குதலால் அச்சத்திலிருந்த மக்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் திடீரென களமிறக்கப்பட்டதால் பதற்றத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version