இலங்கை
செம்மணி புதைகுழி தொடர்பில் புலம்பெயர்ந்த தேச பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்த சுவாமி சங்கரானந்தா
செம்மணி புதைகுழி தொடர்பில் புலம்பெயர்ந்த தேச பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்த சுவாமி சங்கரானந்தா
இலங்கை செம்மணி புதைகுழி தொடர்பில் சுவாமி சங்கரானந்தா புலம்பெயர்ந்த தேசங்களின் அரசியலில், மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை என்ற நாட்டில் அந்த நாடு தனது சுதந்திரத்தை பெற்றதிலிருந்து இன்று வரையிலும்,
ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தி வரும் தொடர்ச்சியான இனவழிப்பு,
அந்த இலங்கை என்ற நாட்டின் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட நோக்கம்தான் என்னும்,
கடுமையான உண்மையை அந்த நாடு பலமுறை நிரூபித்திருக்கிறது.
அந்த வகையில்,
அந்த நாடு அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு செய்து வந்த கொடூரத்தின் ஆழமான சாட்சியங்களில் ஒன்றாக,
செம்மணி மனிதப் புதைகுழி என்ற கொடூரமான சம்பவம் வெளிப்பட்டு இருக்கும் இன்றைய நிலையில்,
இவ்வாறான இன அழிப்பு என்பது, ஒரு சர்வதேசக் குற்றமாகும்.
இந்த செம்மணி மனிதப் புதைகுழி என்பது இலங்கை ராணுவ வீரர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களின் மூலம்,
சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் உறுதி செய்யப்பட்ட உறுதியான ஆதாரங்களைக் கொண்டது என்ற வகையில்,
இது விடயம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இணைத் தலைமை நாடுகளை (Core Group Nations) ஒருங்கிணைந்து அணுகுவது முக்கியம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மற்றும் நடைபெற்று வரும் இன அழிப்பை உறுதிப்படுத்துவதன் மூலம்,
அந்த இணைத் தலைமை நாடுகளைக் கொண்டு,
இலங்கை அரசை சர்வதேச சட்டப் பொறிமுறை முறைமைக்குள் கொண்டு வந்து,
ஈழத் தமிழர்களுக்கான நீதியையும், மற்றும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வையும், எட்ட வைக்க வேண்டும்.
இந்த வழியை அடைவதற்காக,
இலங்கையில் பிறந்து,
சிங்கள பெளத்த பேரினவாத அரசின் அடவடித்தனங்களால்,
புலம்பெயர்ந்து வந்து,
அந்த புலம்பெயர்ந்த தேசங்களின் அரசியலில்,
மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும்,
அல்லது,
மக்கள் பிரதிநிதிகளாக இருந்த,
பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர் உமா குமரன்,
கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரி ஆனந்த சங்கரி,
கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ஜுவானிட்டா நாதன், கனேடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன்,
கனேடிய ஒன்டாரியோ மாகாண அமைச்சரான விஜய் தணிகாசலம்
மற்றும்,
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரான அஷ்வினி அம்பிகைப்பாகர்,
அவுஸ்திரெலியாவின் பிரிஸ்பேனில் பகுதியின் முன்னாள் மாநகர உறுபினராக இருந்த ஜொனத்தன் ஸ்ரீரங்கநாதன்,
அவுஸ்திரெலியாவின் மெல்போர்னில் உள்ள Moreland மாநகர சபையின் உறுப்பினராக இருந்த சமந்தா ரத்னம்,
அத்தோடு,
நோர்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கம்ஷாஜினி குணரத்தினம் ஆகியோர்,
தாம் வாழும் நாட்டின் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் மட்டுமல்லாது,
பிறந்த தேசத்தில் நடந்த இன அழிப்புக்கான சர்வதேச நீதிக்காகவும்,
முக்கிய பொறுப்புடன் செயற்பட வேண்டியதும் அவர்களின் கடமையாகும்.
இதில் நோர்வே நாடாளுமன்றத்தில் தேர்வாகியபோது கம்ஷாஜினி குணரத்தினம், ஈழத் தமிழர்களுக்கான நீதி விசாரணையை மேற்கொண்டு வரும் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்ட பொழுது
“நான் அதைப் பின்தொடரவில்லை, எனவே அதற்கு பதிலளிக்க முடியாது.” என முன்னர் கூறியிருந்தாலும் ,
இலங்கையில் பிறந்து சிங்கள பேரினவாத அரசின் அழுத்தத்தால் தனது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்தவர் என்ற வகையில் அவருக்கும் இது ஒரு தார்மீகக் கடமை இருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு இது சம்பந்தமாக இவர்கள் அனைவரும் இணைத் தலைமை நாடுகளுக்கு ஒரே குழுவாக விஜயம் செய்து அந்த நாடுகளின் பிரதிநிதிகளை அணுகி,
செம்மணி போன்ற மனிதப் படுகொலைகளின் ஆதாரங்களை சட்ட ரீதியாக முன்னிறுத்தி,
ஈழத் தமிழருக்கான நீதியை சர்வதேச மேடையில் வலியுறுத்தி,
சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதை,
இவர்களைப் போல் நானும் ஒரு புலம்பெயர்ந்த தமிழனாக,
இவர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த முயற்சிக்குத் தேவையான சட்ட ஆதரவையும், திட்டமிடல்களையும்,
அந்தந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழ் செயல்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடனும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடனும்,
செயல்படுத்தவேண்டும் என்பதால் அந்த மரியாதைக்குரிய மக்கள் பிரதிநிதிகளுக்கு பொறுப்புடன் ஆலோசனை வழங்கி இதனை முன்னெடுக்க,
அறிவுசார் புலம்பெயர்ந்த சமூகத்தை வேண்டிக் கொள்கின்றேன்.
இந்த விடயத்தை நான் மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குஎடுத்து செல்ல நான் குறிப்பிட்ட நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த உறவுகளிடன் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.