இலங்கை

அபிவிருத்திக்கு குழுக் கூட்டத்தை சந்திரசேகர் நடத்த முடியுமா? அர்ச்சுனா கேள்வி

Published

on

அபிவிருத்திக்கு குழுக் கூட்டத்தை சந்திரசேகர் நடத்த முடியுமா? அர்ச்சுனா கேள்வி

அபிவிருத்திக்கு குழுக் கூட்டத்தை சந்திரசேகர் நடத்த முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார்.

 அவர் அதில், ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்கு அபிவிருத்தி குழு கூட்டத்தின் தலைவராக நியமித்து தங்களை தாங்களே அசிங்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஊழல் செய்ய மாட்டோம் என்று வந்தவர்களுக்கு ஒரு அரசாங்கத்தின் சுற்றறிக்கை வாசித்து விளங்கக்கூடிய அறிவு கூட இல்லையா??
எனக்கு இதன் விளக்கம் தெரியவில்லை விளங்கியவர்கள் சொல்லவும்! 

Advertisement

 33வது பந்தி தெளிவாக சொல்லுகிறது ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அவருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பணம் ஒதுக்கப்பட்டு இருந்தால் மாத்திரம் அவரால் அந்தப் பிரதேச அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.
தெளிவாக முதலாவது வசனத்தை வாசிக்கவும். இங்கே அது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது “ஒதுக்கப்பட்டிருப்பின்”…. ஆனால் அமைச்சர் சந்திரசேகருக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. 

மொத்தமாக வந்த 56 மில்லியனில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமாக பிரித்த போது 9.3 மில்லியன் ரூபாய் பிரிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு இந்த பணம் ஒதுக்கப்படவில்லை.
பன்முகப்படுத்தப்பட்ட நிதியே ஒதுக்கப்படாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதுவும் தேசிய பட்டியலில் வந்தவர் தலைவராக வந்து அந்த சபையையே நடத்துவது எவ்வாறு? என்று அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version