பொழுதுபோக்கு

‘இதுக்கு தியேட்டரில் கைத்தட்டல் வரலைனா மியூசிக் போடுறதை நிறுத்திடறேன்’: இளையராஜா சவால் விட்ட பாடல் தெரியுமா?

Published

on

‘இதுக்கு தியேட்டரில் கைத்தட்டல் வரலைனா மியூசிக் போடுறதை நிறுத்திடறேன்’: இளையராஜா சவால் விட்ட பாடல் தெரியுமா?

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த சிந்து பைரவி படத்தில், இடம் பெற்ற ஒரு பாடலுக்கு தியேட்டரில் கைத்தட்டல்கள் இல்லை என்றால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன் என்று இளையராஜா கூறியுள்ளார். அவர் சொன்னது நடந்தா என்பதை பார்க்க கே.பாலச்சந்தர் தியேட்டருக்கே விசிட் அடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாக வைத்து அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கியவர் கே.பாலச்சந்தர். இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரை அனுகவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.அதே சமயம் சிவாஜி நடிப்பில் எதிரொலி என்ற ஒரு படத்தை மட்டுமு் இயக்கியிருந்தார், முற்றிலும் புதுமுகங்கள், அல்லது ஓரிரு படங்களில் நடித்த நடிகர் நடிகைகளை மட்டுமே வைத்து படம் இயக்கிய கே.பாலச்சந்தர், இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவ. நாகேஷ் நாயகனாக நடிக்க ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.ஆரம்பத்தில் தனது படங்களுக்கு, தான் நாடகங்களில் பணியாற்றும்போது நெருங்கிய நட்புடன் இருந்த வி.குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக்கொண்ட பாலச்சந்தர், அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1970-களின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பை பெற்று வந்தபோகும் கூட, பாலச்சந்தர் எம்.எஸ்.வியுடன் பணியாற்றி பல வெற்றிகளை குவித்து வந்தார்.1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை அணுகியுள்ளார். இசை தொடர்பான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்றும் இந்த பாடல்கள் கேட்டு ரசிக்கும் வகையில் புதுமையாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு தான். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்ததற்கு மற்றொரு காரணம் இது இசை தொடர்பான படம் என்பதால், கே.பாலச்சந்தர் நினைத்ததை விட பாடல்கள் அனைத்து சிறப்பாக வந்துள்ளது.இந்த படத்தில் இடம் பெற்ற, ‘’பாடறிய, படிப்பறிய’’ என்ற பாடலுக்கு இசையமைக்கும்போது இளையராஜா, இந்த பாடல் முடிந்தபிறகு கைத்தட்டல் வரவில்லை என்றால் நான் இசையமைப்பதை நிறுத்தி விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கே.பாலச்சந்தர், படம் ரிலீஸ் ஆனபோது, தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது இளையராஜா சொன்னது போலவே இந்த பாடல் முடிந்தவுடன் ரசிகர்கள் கைத்தட்டியுள்ளனர். இதை கே.பாலச்சந்தர் இளையராஜாவிடம் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version