இலங்கை
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அமெரிக்காவுடனான இறக்குமதி வரிக்குறைப்பு விவாதம்!
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அமெரிக்காவுடனான இறக்குமதி வரிக்குறைப்பு விவாதம்!
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறக்குமதி வரிக்குறைப்பு தொடர்பான விவாதம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இந்த விடயம் தொடர்பில் மெய்நிகர் சந்திப்பொன்றும் நடைபெற்றது. இதன்போது, விரிவான திட்டங்கள் குறித்து ஆராய்ந்ததாகத் தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டுப் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வரிகளை 30 சதவீதமாகக் குறைக்க முடிந்துள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரிகளை நீக்குதல், இலங்கைக்கான இறக்குமதிகள் மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து இதுவரை ஆராயப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.