இலங்கை

இளைஞர் உயிரிழப்பு: யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் பாவனை

Published

on

இளைஞர் உயிரிழப்பு: யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் பாவனை

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் (19) உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயதுடைய செ.பிரசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (19) மயக்தமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில் நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version