இலங்கை

எம்.பியின் மருமகனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு

Published

on

எம்.பியின் மருமகனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வலான மோசடி தடுப்புப் பிரிவினரின் கோரிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குறித்த வாகனம், ரோஹித அபேகுணவர்தனவின் மகளால், ஜகத் விதானவின் மகனுக்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொலிஸார் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை தேடி விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும் அவர், இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version