இலங்கை
கசூரினா கடற்கரையில் தீ விபத்து!
கசூரினா கடற்கரையில் தீ விபத்து!
யாழ். காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணி அளவில் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது.
இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கும் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிஸாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும் பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்
அதிகாலை 2 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது பெருமளவான மரங்கள் தீயினால் எரிந்து நாசமாகியது. தீப்பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.